தென்னிலங்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுட்டுகொலை
கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவமானது நேற்று(11) இடம்பெற்றுள்ளது.
ஜனவரி 23 ஆம் திகதி கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய கஹட்டன கனராம விகாரையில் பணிபுரிந்த கலப்பலுவ தம்மரதன தேரரை காரில் வந்த குழுவினர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
சுட்டுகொலை
இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 32 வயதான நபர் நேற்று (11) ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபரை நேற்று அழைத்துச் சென்றுள்ளனர்.
உயிரிழப்பு
இதன்போது, சந்தேகநபர் தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைவருவதாக காவல்துறையினர் மேற்கொண்டு தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |