இளைஞர் குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு! ஒருவர் பலி
வாள்வெட்டு
முல்லைத்தீவு - முள்ளியவளை தெற்கு பகுதியில் நேற்றிரவு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளது.
சம்பவத்தில் முள்ளியவளை தெற்கினை சேர்ந்த குடும்பஸ்தரான பெருமாள் சதீஸ்வரன் (32 வயது) என்பவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை காவல் நிலையத்திற்கு கிராமத்தவர்கள் தெரியப்படுத்தியும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், சம்பவம் தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்