மர்மமான முறையில் கரையொதுங்கிய சடலங்கள் - தீவிர விசாரணையில் காவல்துறையினர்
Sri Lanka Police
Crime
Death
By pavan
சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்ததாக நம்பப்படும் இருவரின் சடலங்கள் இலங்கையின் இருவேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி சூரியகந்த பிரதேசத்தில் கபுகந்த சனசமூக நிலையத்திற்கு அண்மித்த காட்டுப்பகுதியில் இருந்து சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 36 வயதுடைய கொலொன்னாவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
பெண்ணொருவரின் சடலம்
இதேவேளை, காலி கோட்டையை அண்மித்த கடற்பரப்பில் பெண்ணொருவரின் அடையாளம் தெரியாத சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர் 35-40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மர்ம மரணங்கள் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
