சீனக்குடா காவல்துறையினருக்கு எதிராக திரண்ட முத்துநகர் விவசாயிகள்
முத்துநகர் விவசாயிகள் சீனக்குடா காவல்துறையினருக்கு எதிராக காவல்நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முத்துநகர் பகுதியில் வசித்து வரும் விவசாயக் காணிகளை இலங்கை துறைமுக அதிகார சபை கையகப்படுத்தி அதனை இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்கு வழங்கிய விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் இடையே முரன்பாடான நிலை நிலவி வருகின்றது.
கைது சம்பவம்
இந்த நிலையில், சட்டத்தை நியாயமாக நடைமுறைப்படுத்தாமல் தங்கள் நிலங்களை ஆக்கிரமித்த நிறுவன உரிமையாளர்கள் தங்களைத் தாக்கிய சம்பவம் குறித்து முறைப்பாடு அளிக்க சீனக்குடா காவல் நிலையத்திற்கு சென்ற, முறைப்பாட்டாளர்களை கைது செய்ததற்காக சீனக்குடா காவல்துறையினருக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக முறைப்பாடு அளிக்க நேற்று முன்தினம்(28) சீனக்குடா காவல் நிலையத்திற்கு சென்ற ஆறு முத்து நகர் விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் நிறுவன உரிமையாளர்களின் தாக்குதலில் மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
300 விவசாயிகள்
இருப்பினும், காவல்துறையினர் மற்றைய தரப்பினரை கைது செய்யவில்லை என்றும் பக்கச்சார்பாக செயற்பட்டதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
அதன்படி, சுமார் 300 விவசாயிகள் இன்று(30) குறித்த காவல் நிலையத்திற்கு பேரணியாகச் சென்று தங்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததையடுத்து, அந்த நேரத்தில் காவல்துறையினர் வாயில் கதவை மூடி யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




