மனைவியின் மர்ம மரணம் - பின்னணியில் கணவர்...!
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலமொன்று வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் இரு பிள்ளைகளின் தயாவார், இது தொடர்பில் அவரது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயத்தினை களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். களுத்துறை, கமகொட பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
களுத்துறை, கமகொட பிரதேசத்தைச் சேர்ந்த நீலமுனி ரமணி சில்வா எனப்படும் பெண், அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, களுத்துறை நீதவான் நீதிமன்று வழங்கிய உத்தரவின் படி மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மூச்சுத்திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தேக நபராக கணவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
