யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் மர்ம பொருட்கள்! வெளியான காரணம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By pavan
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரைப் பகுதியில் இன்று(13) காலை மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SL 8 என பெயரிடப்பட்ட கொள்கலன் போன்ற அமைப்பை ஒத்த மர்ம பொருளே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல பொருட்கள் கரை ஒதுங்கிவருகின்றன.
கரையொதுங்கிய புத்த பெருமான்
குறிப்பாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசுகின்ற காற்று காலப்பகுதியில் அதிகளவான பொருட்கள் கரை ஒதுங்குவது வழமையாக இருக்கின்றன.
எனினும் இம்முறை அதிகளவான பொருட்கள் யாழ் பகுதிகளில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, புத்த பெருமான் அமர்ந்திருக்கக் கூடிய தேர் மிதப்புகள், உட்பட பல்வேறு பொருட்கள் அண்மை காலமாக கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி