நயினாதீவில் அலைமோதும் பக்தர் கூட்டம் - போக்குவரத்து வசதியின்மையால் பெரும் அசௌகரியம்
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு போதுமான போக்குவரத்து வசதியின்மையால் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா தற்போது நடைபெற்றுக்கெண்டிருக்கின்றது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் (19.06.2023) அன்று ஆரம்பமானது.
தேர்த்திருவிழா
தொடர்ந்து பதினாறு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில், இன்றைய தினம்(02.07.2023) தேர்த்திருவிழா நடைபெற்றது.
இதற்கமைய தேர்திருவிழாவை கண்டுகளிக்க இன்று நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.
இருப்பினும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு போதுமான போக்குவரத்து வசதியின்மையால் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குகின்றனர்.
ஆலயத்திற்கு செல்வதற்காக துறைமுகத்தில் காத்திருக்கும் குழந்தைகள் உட்பட பலரும் கூட்டத்தில் சிக்கி தவிப்பதை புகைப்படங்களாக பகிர்ந்துள்ளனர்.
இது அரச நிர்வாகத்தின் திறமையற்ற செயற்பாட்டை அம்பலப்படுத்துகிறது என அங்கிருப்போர் தெரிவிக்கின்றனர்.
