நாகர்கோயில் மாணவர்கள் படுகொலை : இன்றுடன் 28 ஆண்டுகள் கடக்கிறது
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39 பேர் ஈவிரக்கமின்றி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்று(22) நினைவுக் கூரப்பட்டுள்ளது.
இந்தக் கொடூர நிகழ்வு இடம்பெற்று இன்றுடன் 28 ஆண்டுகள் கடக்கின்ற நிலையில் நினைவு கூரப்படுகின்றது.
அஞ்சலி நிகழ்வு
1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில் மத்திய பாடசாலையில் சிறிலங்கா விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்தப் படுகொலை நினைவு தினம் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிலையில், ஆறாத் துயரில் வாய்விட்டு அழுது அஞ்சலி செலுத்தினர்.
இன்று நண்பகல் 12 மணியளவில் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக, பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், நினைவுத் தூபிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.