நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதைப்பொருளுடன் கைது
நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (04) இடம்பெற்றுள்ளது.
மேற்படி நபர், கோண்டாவில் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
போதைபொருள்
கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், யாழ்ப்பாண காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதவாம் இணைப்பு
மேலதிக விசாரணை
கொடிகாமம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 3 கிராம் 800 மில்லி கிராம் கெரோயின் தனது உடமையில் வைத்திருந்த வரணி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிக்காமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |