நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை - கொழும்புக்கு அனுப்பபட்ட கடிதம்
Nallur Kailasanathar Kovil
By pavan
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி, ஆலய மகோற்சத் திருவிழா எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், பெருந்திருவிழாவை முன்னிட்டு தினசரி தொடருந்து சேவையை முன்னெடுக்கவேண்டும் என தொடருந்து திணைக்கள பொது முகாமையாளருக்கு , நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
விசேட தொடருந்து சேவை
ஆலய உற்சவ காலத்தில் அடியவர்களின் பயணவசதிகளை இலகுபடுத்தும் நோக்கில் தொடருந்து சேவையை வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சத் திருவிழாவை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அளவுக்கு அதிகமான பக்தர்கள் வழிபட ஆலயத்திற்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்