அநுர அரசின் கட்டளைக்கிணங்க செயற்படும் பாதாளக் குழுக்கள்: நாமல் பகிரங்கம்
அநுர அரசின் அனுசரணையுடன்தான் பாதாளக் குழுக்கள் இயங்குகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அநுர அரசுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியில் நாங்கள் பங்கேற்போம்.
சகல எதிர்க்கட்சி
ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகல எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு.
அரசின் போலியான வாக்குறுதிகளால் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த அரசியல் கட்சிகள் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அரசியல் கொள்கை வேறுபாடு என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியில் கலந்துகொள்ளாமல் இருப்பது முறையற்றது.
அரசின் அனுசரணை
அநுர அரசின் அனுசரணையுடன்தான் பாதாளக் குழுக்கள் இயங்குகின்றன.
இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று குறிப்பிடுவது அரசின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது.

பாதாளக் குழுக்கள் இந்த அரசின் கட்டளைக்கமையச் செயற்படுகின்றன, அரசு குறிப்பிடும் போது துப்பாக்கிச்சூடுகள் இடம்பெறுகின்றன.
பாதாளக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் காரணமாகவே துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுவது தேசிய பாதுகாப்பின் பலவீனத்தையே வெளிப்படுத்துகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்