நாமல் புறொய்லர் கோழி - கடவுளால் கூட அரச தலைவராக்க முடியாது - விமல் வீரவன்ச கடும் சீற்றம்
நாமல் ராஜபக்சவை இந்த நாட்டின் அரச தலைவராக்க புனிதமான கடவுளால் கூட முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச புறொய்லர் கோழி என்றும் அவரது தந்தை மகிந்த ராஜபக்ச அரசியலின் கிராமத்துக் கோழி என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராஜபக்ச குடும்பத்தில்

ராஜபக்ச குடும்பத்தில் எவரும் இனிவரும் காலத்தில் நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்படமாட்டார்கள் எனினும் அவர்கள் அரசியலில் ஏதாவது ஒரு மட்டத்தில் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் போது

காலிமுகத்திடல் போராட்டத்தின் போது மகிந்த ராஜபக்ச அரச தலைமைத்துவத்தில் இருந்திருந்தால் அதனை சரியாக நிர்வகித்திருப்பார் எனவும் பொருளாதாரம் இவ்வளவு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்காது எனவும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்