மொட்டுவின் அதிபர் வேட்பாளராக நாமல் - ரணிலின் அடுத்த நிலை..!
அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை நடத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் தான் முன்மொழிந்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் அத்தகைய வாய்ப்பு ஏற்பட்டால், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழும்புகின்றது.
தற்போதுள்ள அரசியலமைப்பின்படி பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிடமுடியாது.
வலிமைமிக்க எதிர்க்கட்சி
அவர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் நாமல் ராஜபக்சவின் வேட்புமனுவுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
ஆனால் அவர் இன்னும் தயாராகவில்லை மற்றும் அனுபவமற்றவர் என்று கட்சியில் உள்ள மற்றவர்கள் கூறுகின்றனர்.
அவருக்கு நாடு தழுவிய ஆதரவு இருக்காது என்றும், மேலும் அனுபவம் தேவை என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க போன்ற வலிமைமிக்க எதிர்க்கட்சி வேட்பாளர்களை எதிர்கொள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கே வாய்ப்பு கிட்டும் என்று பொதுஜன பெரமுன கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.