பிள்ளையானின் கைதில் அதிருப்தி! நாமல் வெளிப்படை
அரசாங்கத்தின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் இன்றைய (23) நாடாளுமன்ற அமர்வில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
பிள்ளையானின் (Pillayan) கைது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் சட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நீங்கள் காவல்துறையினரை கொண்டு சட்டத்தை முறைப்படுத்த பாருங்கள்.
ஒரு புறம் பிள்ளையானை கைது செய்து வைத்துள்ளனர்.
ஏன் என வினவினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என கூறுகின்றார்கள்.
தடுப்புக்காவல்
இருப்பினும், அவரது தடுப்புக்காவல் உத்தரவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என பதிவிடப்படவில்லை.
ஆனால் தடுப்புக் காவல் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.
தடுப்புக்காவல் உத்தரவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என பதிவிடப்படவில்லை என்ற போதிலும் ஊடகங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 8 மணி நேரம் முன்
