அமைச்சுப் பதவியை துறக்கத் தயார்! உங்களால் அது முடியுமா? நாமல் ராஜபக்ச அதிரடி
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் சொல்வது போல், அமைச்சரவையை குறைப்பதற்கு முன்னுதாரணமாக அவர்கள் செயற்படுவார்களாயின், நானும் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை குறைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் வழங்கிய போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்துரைத்த அவர்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பவர்கள் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு முன்னுதாரணமாக செயற்பட முடியும். அவ்வாறு அவர்கள் செய்வார்களாயின் நானும் பதவி விலக தயார்.
எனவே ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னுதாரணமாக செயற்படுமானால், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நான் முன்னுதாரணமாக பதவி விலகுவேன் என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
