நாட்டில் இருந்து வெளியேறிய ராஜபக்ச குடும்பத்தின் இரு உறுப்பினர்கள்! விமான நிலையம் வந்த நாமல்
Bandaranaike International Airport
Namal Rajapaksa
Sri Lanka
France
By Benat
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ஷ அவரது குழந்தையுடன் இன்று அதிகாலை சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளனர்.
லிமினியும் அவரது குழந்தையும் நள்ளிரவு 12.05 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் சிங்கப்பூர் சென்று பின்னர் பிரான்சுக்குப் புறப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
விமான நிலையம் வந்த நாமல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கடந்த காலங்கள் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்ட போதும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமலின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்