அநுர கட்சி நினைக்கும் அந்த ஆட்சி கனவில் மட்டுமே! நாமல் ஆவேசம்
மக்களை அச்சுறுத்தி, மிரட்டி, மகா சங்கத்தினரை அவமதித்து, அரசு அதிகாரிகளை, சட்டமா அதிபர் திணைக்களத்தை மற்றும் நீதித்துறையை பயமுறுத்தி ஒரு அரசாங்கத்தை நடத்த முடியும் என்று தேசிய மக்கள் சக்தி அமைச்சர் கே.டி. லால் காந்த நினைத்தால், அது வெறும் கனவு மட்டுமே என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் அமைச்சருக்கு தேவையற்றதாக தோன்றினாலும், நாட்டிற்கு இது மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் வழங்கிய செய்தி
அதன்போது மேலும் தெரிவித்த நாமல், “அரசு எங்களிடமிருந்து மட்டுமல்ல, மக்களிடமிருந்தும் வரும் அறிகுறிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்களது அரசியலை மிரட்டலாலும் பயமுறுத்தலாலும் நிறுத்த முடியாது. கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் வழங்கிய செய்தியை அரசு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
இதையும் அலட்சியம் செய்தால், எதிர்காலத் தேர்தல்களில் மக்கள் இன்னும் கடுமையான பதிலை வழங்குவார்கள்”என்றார்.
மேலும், ஒரு கட்சியாக, தங்கள் திட்டம் வழக்கம் போல் மிகவும் வெற்றிகரமாக முன்னேறி வருவதாகவும் ஏராளமானோர் கட்சியில் இணைந்து வருகின்றதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த காலத்தில் சில அரசியல் பிரச்சினைகள் காரணமாக விலகி இருந்த பலர் இப்போது எங்கள் திட்டத்துடன் முன்னேறி வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |