மாண்டஸை அடுத்து வரும் புயலுக்கு மொக்கா என்று பெயர்..!
வங்கக் கடலில் தற்போது உருவாகி தாக்கத்தை ஏற்படுத்தி வரும் புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தின் பரிந்துரைப்படி இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயலை அடுத்து வங்க கடலிலோ, அரபிக் கடலிலோ உருவாக உள்ள புயலுக்கு 'மொக்கா' என பெயரிடப்பட்டுள்ளது. ஏமன் நாட்டின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான மொக்கவை குறிக்கும் விதத்தில் அடுத்து உருவாகும் புயலுக்கு இந்த பெயர் சூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் புயல் உருவாகும் நிலையில் இவ்வாறு உருவாகும் புயல்களுக்கு இந்த பகுதியில் அமைந்துள்ள இந்தியா, பாகிஸ்தான் கத்தார், இலங்கை, ஏமன், தாய்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட 13 நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் இருந்து முடிவு செய்யப்படும் ஒரு பெயர் வைக்கப்பட்டு வருகிறது.
மொக்கா
இதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த 'மாண்டஸ்' என்ற பெயர், வங்கக் கடலில் உருவாகி தற்போது மாமல்ல புரத்துக்கு அருகே கரையை கடந்து கொண்டிருக்கும் புயலுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாட்டு மொழியில மாண்டஸ் என்பதற்கு 'புதையல் பெட்டி' என்று அர்த்தம் கூறப்படுகின்றது. மாண்டாஸ் புயலின் தாக்கம் குறைந்த பிறகு ,வங்கக் கடலிலோ, அரபிக் கடலிலோ உருவாகும் புயலுக்கு 'மொக்கா' என்று பெயரிடப்பட உள்ளது.
குறித்த பெயர் ஏமன் நாட்டில் பெயர் பெற்ற" துறைமுகமான மொக்காவை குறிக்கும் வகையில் இந்த பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்து, அதனை மற்ற நாடுகள் ஏற்று கொண்டுள்ளதை அடுத்து, மாண்டஸை அடுத்து உருவாக உள்ள புயலுக்கு இந்த பெயர் சூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது