சிறையிலிருந்து வெளியே வந்தார் நடாஷா
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று (05) பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்ட நடாஷா எதிரிசூரிய பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து இன்று (06) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதனால், அவர் கைது செய்யப்பட்ட 39 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில்

கொழும்பில் நடைபெற்ற "மோதாபிமான" நிகழ்ச்சியின் போது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரியவை 100,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை அறிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது என தெரிவித்தார்.
பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து

இதன்படி, வெலிக்கடை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரிய இன்று பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து விடுவிக்கப்பட்டார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்