இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோய் !
இலங்கையில் நாளாந்தம் 106 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக புற்றுநோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் பாதிப்பு
அத்துடன், இவ்வருடத்தில் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 3 தசாப்தங்களில் உலகெங்கிலும் 50 வயதுக்குட்பட்டவர்களிடையே புதிதாகப் பதிவாகியுள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் வகைகள்
இதேவேளை, உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் 127 வகையான புற்றுநோய்களை உலக சுகாதார ஸ்தாபனத்தின் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றில் சுமார் 41 நோய்கள் இலங்கையில் இருப்பதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
மேலும், இலங்கையில் ஆண்கள் மற்றும் பெண்கள் 10 வகையான புற்றுநோய்களை எதிர்கொள்வதாக சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் பிரச்சாரத்தின் சமூக சுகாதார வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவிந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |