யாழில் இருந்து தேசிய கல்வி நிறுவன சபைக்கு இருவர் நியமனம்
இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு (National Educational Institutions Council) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி யாழ்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும் - யாழ் பல்கலைக்கழக (UOJ) விரிவுரையாளருமான மகேந்திரன் திருவரங்கன் (M.Thiruvarangan) மற்றும் உடுவில் மகளிர் கல்லூரியின் (Uduvil Girls' College) முன்னாள் அதிபர் ஷிராணி மில்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு தரப்பினரும் பாராட்டு
அவர்கள் இருவரும் எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரை (Education Minister) சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட இருவருக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |