தனியாருக்கு தாரைவார்க்கப்படும் அரச எரிபொருள் நிரப்பு நிலையங்கள்: கஞ்சன அதிரடி நடவடிக்கை
நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் நிர்வாகம் தொடர்பான தகவல் ஒன்றை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் நிர்வாகத்தை தனியாருக்கு வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், அந்த நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யவும், விநியோகிக்கவும் விற்பனை செய்யவும் அதிகாரத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ள நிறுவனங்கள்
இலங்கை பெட்ரோலிக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களை தனியாருக்கு வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, எரிபொருள் நிரப்பும் நிலையங்களை பெற்றுக்கொள்ள 24 நிறுவனங்கள் விலை மனுக்களை முன்வைத்துள்ளதுடன் அவற்றில் தகுதியை பூர்த்தி செய்துள்ள சில நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
