சுன்னாகத்தில் புடவைக்கடையில் பற்றியது தீ : கோடிக்கணக்கில் ஏற்பட்ட இழப்பு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Sumithiran
சுன்னாகம்(chunnakam) பகுதியில் உள்ள புடவையகத்தில் நேற்றிரவு (19) இடம்பெற்ற தீ விபத்தில் 1 கோடி 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
சுவாமி படத்திற்கு ஏற்றிய தீபத்தில் இருந்து பற்றிய தீ
குறித்த கடையில் வியாபாரம் நிறைவடைந்த பின்னர் பணியாளர் ஒருவர் கடையை பூட்டிவிட்டு வீடு சென்றுள்ளார். அங்கு சுவாமி படத்திற்கு ஏற்றிய தீபத்தில் இருந்து தீப்பற்றி கடை எரிந்து நாசமாகியது.
இது குறித்து சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்