அநுர அரசின் செயற்பாடு : மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு
சமகால அரசாங்கம் தொடர்பில் நான் ஒன்றும் கூற முடியாது. நேரடியாக தொடர்புடையவர்கள் சாதாரண மக்கள் என்பதால் அரசாங்கம் தொடர்பில் மக்களிடம் தான் அபிப்ராயம் கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (maithripala sirisena)தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் -(20-) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது தெடார்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு வருடத்திற்கு பின்னர் தெரிவிக்கலாம்
எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது, பொருட்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தங்களது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்கின்றனர்.
மேலும், அரசாங்கம் பொறுப்பேற்று 7, 8 மாதங்களே கடந்துள்ள நிலையில், தற்போது எதையும் கூறுவதென்பது கடினமானது. ஒரு வருடம் கடந்த பின்னர் அவர்கள் குறித்து தெரிவிக்கலாம்.
எரிபொருள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
தற்போது, எரிபொருள் மற்றும் பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்திருப்பதை காண முடிகின்றது. பொதுமக்கள் மிகவும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். சாப்பிட முடியாத நிலையில் கூட மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
