மண்டைக் கொண்டையை மறந்த சரத்பொன்சேகாவின் தேசியத்தலைவர் சரணடைவுக்கதை!
அநுர அரசாங்கத்துக்கு எதிர்ப்பும் பௌத்தசாசன குடைச்சலும் என்ற கோதாவில் பௌத்த கடும்போக்கு காவிகள் நாளை கொழும்பில் ராஜபக்சக்களின் ஆசீர்வாதயவுடன் தமது மீள்ஒன்றிணைவு காட்சிக்கு தயாராகின்றனர்.
இலங்கையில் இனவாத மற்றும் தீவிரவாத குழுக்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக ஜேவிபியின் முக்கிய முகமும் அமைச்சருமான லால்காந்த ஏற்கனவே அலறிய நிலையில், ஐயகோ இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் ஒரு அரசாங்கமே பௌத்த சாசனத்தைன குறிவைத்து அடிப்பதை தட்டிக்கேட்பார் யாருமில்லையா? நாம் பாவிகளானோமோ என்ற கூக்குரலுடன் காவிகளின் இந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் இன்னொரு புறத்தே அனுர தரப்பின் ஒரு மறைமுகப் பேச்சாளராக மாறிவிட்ட சிறிலங்காவின் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவும் தமிழர்கள் மீதான முள்ளிவாய்கால் பேரவலத்தை மையப்படுத்தி சில பழைய ஒலிப்பதிவுகளை ஒலிக்க விட்டபடி ராஜபக்ச எதிர்ப்பு சக அனுரதரப்பு ஆதரவு என்ற ஒரு கல் இரண்டுமாங்காய்கள் என்ற அரசியலை செய்திருக்கிறார்.
தமிழீழதேசிய தலைவர் தனது சாதி மறுப்பு காதலுக்காக 14 பேரை சுட்டுக் கொன்றதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடந்தமாதம் சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் அரசியில் செய்த விடயம் எதிர்மறையாக அதிர்ந்ததால் தனது உரையில் ஒரு பிறழ்வு நடந்ததாக திருமாவளவனே யூ திருப்பம் எடுத்த நிலையில் அனுரதரப்புக்கு மறைமுக பரிவட்டம் கட்டும் முகங்களில் ஒன்றாக மாறிய பீல்ட்மார்சல் சரத்பொன்சேகா,தனது மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்து சில கதைகளை சொல்லிய நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |