எரிவாயுத் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையில் எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் (Litro Gas) தெரிவித்துள்ளது.
அத்துடன் தம்மிடம் போதுமானளவு எரிவாயு இருப்பு காணப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாகத் தேவையற்ற வகையில் பதற்றமடைய வேண்டாம் என அந்த நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் விநியோகம்
பெப்ரவரி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தாங்கள் ஏற்கனவே 284,000 வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (19) முதல் சனிக்கிழமை வரை மேலும் 351,000 வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தகக்து.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |