தேசிய மாலுமிகள் தினம் ! கிடைத்தது அங்கீகாரம்
Fishing
Sri Lanka Government
By Kathirpriya
இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் கடற்தொழிலாளர்களை அங்கீகரிக்கும் விதமாக தேசிய மாலுமிகள் தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 21 ஆம் திகதியையே தேசிய மாலுமிகள் தினமாக அறிவித்துள்ளனர்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்தொழிலாளர்களின் பங்களிப்பு
இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடற்தொழிலாளர்களின் பங்களிப்பை மதிப்பிடுவதற்கும் கடற்பயணத் தொழிலில் ஆர்வமுள்ளவர்களை ஈர்ப்பதற்காகவுமே இந்தப் பிரேரணை முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21 ஆம் திகதியை தேசிய மாலுமிகள் தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி