வட்டுவாகல் கோட்டாபய கடற்படைத்தளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள புலனாய்வாளர்!
Mullaitivu
Sri Lanka Police Investigation
Sri Lanka Navy
Death
By Pakirathan
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த கடற்படை வீரர் ஒருவர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளையைச் சேர்ந்த டபிள்யு எம் எல் பி வணசிங்க என்ற குறித்த கடற்படை வீரர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் (15.04.2023) இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்று (16.04.2023) காலை கடற்படை தளத்தில் உள்ள அவரது படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இன்று (17) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் மாரடைப்பு காணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி