கொழும்பு - கோட்டை தொடருந்து சேவை பாதிப்பு : பொது மக்களுக்கு வெளியான அறிவிப்பு
கொழும்பு (Colombo) - தெமட்டகொட (Dematagoda) தொடருந்து நிலைய ஊழியர்கள் தமது கடமைகளை புறக்கணித்துள்ளதால் தொடருந்து சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் தொடருந்து சேவைகளில் தாமதங்கள் மற்றும் தொடருந்துகள் இரத்துச் செய்யப்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெமட்டகொட தொடருந்து திணைக்கள ஊழியர் ஒருவர் காணாமற் போனமை தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊழியர்கள் தற்போது தமது பணிகளில் இருந்து விலகியுள்ளனர்.
தொடருந்துகள் இரத்து
இதன் காரணமாக காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த பொடி மெனிகே தொடருந்து மற்றும் பதுளை ஒடிசி ஆகிய தொடருந்துகளை இதுவரையில் இயக்க முடியவில்லை என தொடருந்து திணைக்கள போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை காரணமாக பல தொடருந்து பயணங்களை இரத்து செய்ய வேண்டியுள்ளதாகவும் இந்திபொலகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |