தடை செய்யப்பட்ட டெலிகிராம் செயலி: வெளிநாடொன்றின் அதிரடி முடிவு
நேபாள அரசு, மக்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமுக்கு தடை விதித்துள்ளது.
இந்த செயலி நிகழ்நிலை மோசடிகளுக்கும், பணம் முறைகேடாக பரிமாற்றப்படுவதற்கும் பெரிதும் பயன்படுத்தப்படுவதாக கூறி, அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இதன்படி, நேபாள தொலைத்தொடர்பு ஆணையமான Nepal Telecommunications Authority (NTA), இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் அனைத்துக்கும், டெலிகிராம் செயலிக்கு உடனடி அணுகல் தடையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அம்சங்கள்
டெலிகிராம் செயலி 2013-ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் மற்றும் நிக்கொலை டூரோவ் ஆகிய சகோதரர்களால் உருவாக்கப்பட்டது.
இதில் வலுவான கடவுச்சொல் குறியாக்கம், தனியுரிமை பாதுகாப்பு, பெரிய குழுக்களும் பிராட்காஸ்ட் சனல்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.
இதற்கு முன், 2023 நவம்பரில் சமூக அமைதிக்கேடாக இருக்கக்கூடிய மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் காரணமாக டிக் டாக் செயலியும் நேபாளத்தில் தடை செய்யப்பட்டது.
தடையில் பயனில்லை
ஆனால், அதன் பின்னணிக் குழு ByteDance அரசு விதிகளை ஏற்று, டிஜிட்டல் கல்வி மற்றும் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை ஆதரிக்க ஒப்புக்கொண்டதால் 2024 ஓகஸ்டில் அந்தத் தடை நீக்கப்பட்டது.
இந்நிலையில், டெலிகிராம் போன்ற செயலிகளை முறையாகத் தடுக்க பலர் VPN-களை (Virtual Private Network) பயன்படுவதால், இந்த தடை பயனில்லை என தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
