நாடாளுமன்றம் தீ வைத்து அழிப்பு!நேபாளத்தில் முற்றும் வன்முறை
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையும், அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளும் காரணமாக தொடங்கிய இளைஞர் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்துள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில், போராட்டக்காரர்கள் நேபாள நாடாளுமன்றக் கட்டடத்தையும், அமைச்சரவைக் கட்டடங்களையும் தீ வைத்ததோடு, பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் தனிப்பட்ட இல்லத்திற்கும், பல அமைச்சர்களின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டன.
மேலும் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டன.

இறுதி தருவாயில் மகிந்தவுக்கு அழைப்பு விடுத்த லசந்த: மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை
இளைஞர்கள் சுட்டுக் கொலை
சமூக வலைதளங்களில் YouTube, Facebook, Instagram உள்ளிட்ட 26 செயலிகளைத் தடைசெய்த அரசின் முடிவே போராட்டத்திற்கான தொடக்க காரணமாக அமைந்தது.
இளைஞர்கள் அந்தத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 இளைஞர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது இதனால் போராட்டம் தீவிரமடைந்து, அரசுக்கு எதிரான மக்களின் சினம் வெடித்தது.
நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து நேபாள அரசு சமூக வலைதளத் தடையை மீளப் பெற்றாலும், மக்கள் எதிர்ப்பு தணியவில்லை.
பிரதமர் பதவி விலகல்
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவி விலககினார்.
அத்தோடு, அரசின் ஊழல் நடவடிக்கைகளை எதிர்த்து விவசாய அமைச்சரும் பதவியை விலகினார்.
எனினும் இளைஞர்களின் போராட்டம் இரண்டாம் நாளிலும் நீடித்து, கட்சி அலுவலகங்கள், அரசாங்கக் கட்டடங்கள், அமைச்சர்கள் வீடுகள் என பல இடங்களில் வன்முறை வெடித்தது.
பாதுகாப்புப் படைகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரத் தவறிய நிலையில், பொதுமக்களின் எழுச்சிக்கும், பரவலான போராட்ட அழுத்தத்திற்கும் இடையே நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவி விலகுவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
