மேற்குக் கரையில் பதற்றம் உச்சத்தில்...! ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த நெதன்யாகு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரான் (Hebron) நகருக்கு அருகே முழுமையான ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாதுகாப்புப் படையினர்
ஹெப்ரான் நகருக்கு அருகிலுள்ள ராணுவச் சாவடி / சோதனைச் சாவடி பகுதியில் காரில் வந்த பலஸ்தீனியர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் மூவர் காயமடைந்தனர்.

இஸ்ரேலியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பலஸ்தீனியர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், ஹெப்ரான் நகரத்தைச் சுற்றி உடனடி முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் மேற்குக் கரை முழுவதிலும் முழுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்த ராணுவத்திற்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அத்துடன், ஒரு பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேலிய இராணுவம் ஆயத்தமாகி வருவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தாக்குதலாளிகளின் வீடுகள் சோதனையிடப்பட்டு சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |