காசா போர் :இஸ்ரேல் பிரதமரின் சூளுரை
காசாவில் நடந்துவரும் போரில் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் எனவும், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்து விடுவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு உறுதிபட தெரிவித்து உள்ளார்.
டெல் அவிவில் உள்ள இராணுவ தளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் 100-க்கு மேற்பட்ட பாலஸ்தீன பயங்கரவாதிகளை கொன்று குவித்தனர்.
பிணைக்கைதிகளை மீட்போம்
நாள்தோறும் ஏராளமான பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுகின்றனர். ஹமாசை நாங்கள் முற்றிலும் ஒழித்து விட்டு எங்கள் பிணைக்கைதிகளை மீட்போம். போரில் வெற்றி பெறுவோம்' என சூளுரைத்தார்.
தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்
இதேவேளை இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதல்களில் நாளாந்தம் நூற்றுக்கும் மேறபட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். பெறுமதியான பல சொத்துக்களும் தகர்க்கப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக மத்திய காசாவில் இஸ்ரேல் இராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் தீவிரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த ஆக்ரோஷமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |