இரத்த வெறி அடங்காத இஸ்ரேல்: சிக்கி தவிக்க போகும் அப்பாவி மக்கள்
ஹமாஸ் (Hamas) தலைவர் கொல்லப்பட்டாலும் போர் இன்னும் முடியவில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கெனவே போரில் 42,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு அமைதியை விரும்பும் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஃபாவில் நேற்றையதினம் (17.10.2024) இடம்பெற்ற தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாா் (Yahya Sinwar) உயிரிழந்தார். கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த ஹமாஸ் படையை சேர்ந்த மூவர், இஸ்ரேல் இராணுவத்தினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
ஹமாஸ் தலைவர்
பதிலுக்கு இஸ்ரேல் குண்டுவீசி தாக்கியது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை இஸ்ரேல் இராணுவம் அடையாளம் கண்டபோது, மூன்று சடலங்களில் ஒன்று ஹமாஸ் தலைவர் என்பதை கண்டுபிடித்தது.
ஹமாஸை அழிப்பதே இஸ்ரேலின் நோக்கம் என்று அதன் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார். இந்த போரில் 42,000க்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், யாஹா சின்வாா் இறப்புடன் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாா் கொல்லப்பட்டாலும் போர் இன்னும் முடியவில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
பணயக்கைதிகள்
மேலும், ஹமாஸ் படையினர் ஆயுதங்களை போட்டுவிட்டு, அவர்கள் கடத்தி சென்றிருக்கும் 23 நாடுகளை சேர்ந்த 101 பணயக்கைதிகளை விடுவிக்கும் பட்சத்தில் போர் முடிவடையும்.
இஸ்ரேலிலிருந்து பிடித்து செல்லப்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பணயக்கைதிகளை நாங்கள் உயிருடன் மீட்டு வருவோம் என்று உறுதி கூறுகிறேன்.
ஈரானால் கட்டமைக்கப்பட்ட பயங்கரவாதம், நம் கண் முன்னே சரிந்து விழுந்துக்கொண்டிருக்கிறது. விரைவில் ஈரானின் ஆதிக்கம் முடிவுக்கு வரும். விரைவில் மத்திய கிழக்கில் அமைதியும், செழிப்பும் திரும்பும்" என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் இந்த அறிவிப்பால் மேலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர் ஆபத்தில் தள்ளப்பட்டிருப்பதாக ஹமாஸ் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |