வைத்தியசாலை ஒன்று குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
சுகாதார சுற்றுலாவை இலக்காகக் கொண்டு புதிய மாதிரியின் கீழ் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை (NFTH) அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் சுகாதார அமைச்சில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் (Nalinda Jayatissa) இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட்டுள்ளது.
இதன்படி, சுகாதார அமைச்சகத்தின் கீழ் NFTH ஐ கையகப்படுத்தவும், சிறப்பு வைத்தியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அபிவிருத்தி நடவடிக்கை
மேலும். வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரின் பணிப்புரையுடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டிசம்பர் 2024 இறுதிக்குள் NFTH இன் மேம்பாடு குறித்த திட்டங்களின் அறிக்கையை குழு சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |