மரக்கறி விலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு
இலங்கையில் இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இல்லையென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மே மற்றும் ஜூன் மாதங்களில் சந்தையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய தானிய வகைகளின் விலை மட்டங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பில் ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையை விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் (Mahinda Amaraweera) கையளிக்கும் போதே அந்த நிறுவனம் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளது.
கடும் மழை
மே மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் கடும் மழை பெய்தால், ஜூன் மாதம் வரை மரக்கறிகளின் விலையில் சில அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை நாட்டில் தற்பொழுது பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூபா 60 தொடக்கம் 70 ரூபாய்கு கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |