அஸ்வெசும கொடுப்பனவு பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான தகுதியான பயனாளிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பட்டியல் நலன்புரி நலன்புரி சபையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.wbb.gov.lk-லும் வெளியிடப்பட்டுள்ளது.
மேல்முறையீடு செய்ய வாய்ப்பு
இரண்டாம் கட்டத்திற்கான தகவல் சேகரிப்பின் போது வழங்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் பிழை அல்லது முரண்பாடு இருப்பதாக உணரும் விண்ணப்பதாரர்கள் மற்றும் தகுதியான பயனாளிகளின் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றால், அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.
இதேவேளை, அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான ஆரம்ப விண்ணப்பத்தை சமர்ப்பித்த போதிலும், வீட்டுத் தகவல்களைச் சேகரிக்க ஒரு அரசு கள அலுவலர் வீட்டிற்கு வரவில்லை என்றால், அத்தகைய விண்ணப்பதாரர்களும் மேல்முறையீடு செய்யலாம்.
மேல்முறையீடு செய்வதற்கு முன், அனைத்து மேல்முறையீடு செய்பவர்களும் IWMS தரவுத்தளத்தை அணுகி, வீட்டுத் தகவல் சேகரிப்பின் போது அவர்களின் குடும்பம் குறித்து வழங்கப்பட்ட தகவல்களைக் கண்காணிக்க வேண்டும்.
ஆட்சேபனைகள் சமர்ப்பிப்பு
மேல்முறையீட்டாளர்கள்/ ஆட்சேபனையாளர்கள் www.wbb.gov.lk என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் சமர்ப்பிப்புகளை உள்ளிடுவதன் மூலம் தங்கள் மேல்முறையீடுகள்/ ஆட்சேபனைகளை நிகழ்நிலையில் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நிகழ்நிலையில் சமர்ப்பிக்கும் போது தங்கள் பகுதியில் உள்ள விதாதா வள மையங்களிலிருந்தும் உதவி பெறலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
