சிறையிலுள்ள இம்ரான்கானை இராணுவத்தளபதி கொலை செய்ய சதி : பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தானில் (pakistan)முன்னாள் பிரதமர் இம்ரான்கானை(imran khan) சிறையிலேயே படுகொலை செய்ய இராணுவத்தளபதி சதி செய்து வுரவதாகவும் எந்த நேரத்திலும் சிறையிலிருந்து "கெட்ட செய்தி" வரலாம் என அவரது சகோதரி அலீமா கான் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்ரான் கானின் பிணை மனுக்கள் வேண்டுமென்றே ஒத்திவைக்கப்படுவதாகவும், தனது சகோதரர் நியாயமான விசாரணை அல்லது நிவாரணம் இல்லாமல், காலவரையின்றி சிறையில் வைக்கப்படுவதற்காக சட்ட செயல்முறை தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அடிப்படை வசதிகள் கூடகிடைப்பதில்லை
மேலும் சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் கூட இம்ரானுக்கு கிடைப்பதில்லை என்றும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கூட அவரை சந்திக்க மறுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அறிவிக்கப்படாத இராணுவ ஆட்சி
இராணுவ தளபதி முனீர் பாகிஸ்தானில் அறிவிக்கப்படாத இராணுவ ஆட்சியை நடத்தி வருவதாகவும், இம்ரான் கானை அரசியல் ரீதியாக அழிப்பதற்காக தனிமைப்படுத்தப்படுவதாகவும், சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் எந்த நேரத்திலும் சிறையிலிருந்து "கெட்ட செய்தி" வரலாம் என்று அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
