கடந்த ஆண்டியில் அயிரக்கணக்கில் பலியான புலம்பெயா் அகதிகள்!
கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர முயன்றவர்களில் 7,667 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை ஐ.நா.வின் சர்வதேச புலம்பெயர் அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
அத்தோடு, பலர் மாயமாகியுள்ளதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அபாயகரமான கடல்
சட்டப்பூர்வ புலம்பெயர்வுக்கான வாய்ப்புகள் குறைந்ததால், மக்கள் ஆள்கடத்தல் கும்பல்களின் பிடியில் சிக்கி இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக, மத்திய தரைக்கடல் உள்பட அபாயகரமான கடல் வழித்தடங்களில் அதிக இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்தநிலையில், 2024 இல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,200 ஆக இருந்த நிலையில் 2025 இல் அது 7,667 ஆகக் குறைந்துள்ளது.
இருப்பினும், இது முன்னேற்றத்தினால் ஏற்பட்ட குறைவு அல்ல என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிதி ஒதுக்கீடு குறைந்ததால் மீட்புப் பணிகள் மற்றும் தரவு சேகரிப்புப் பணிகள் முடங்கியதே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |