தேசிய அருங்கலைகள் பேரவையின் புதிய தலைவராக ஆயிஷா விக்ரமசிங்க
தேசிய அருங்கலைகள் பேரவையின் (National Crafts Council) தலைவராக நாகரீக வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணரான கலாநிதி ஆயிஷா விக்ரமசிங்க (Ayesha Wickramasinghe) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி (Sunil Handuneththi) இன்று (23) உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
ஆயிஷா விக்ரமசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் (University of Moratuwa) சிரேஷ்ட விரிவுரையாளராக 2006 ஆம் ஆண்டு முதல் நகரீக ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
உள்ளூர் கைவினைத் துறை
இலங்கை, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து (Sri Lanka, United Kingdom, United States) பிராண்ட் விளம்பரம் மற்றும் வடிவமைப்பில் விரிவான தொழில்முறை அனுபவத்தை கொண்டுள்ளார்.
காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான ஆயிஷா மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் முதல் தரத்தில் பட்டம் பெற்றார்.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அருங்கலைகள் பேரவை உள்ளூர் கைவினைத் துறையை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |