சமையலில் அசத்தும் ரோபோ - ஆராய்ச்சியாளர்கள் சாதனை!
United Kingdom
World
By Pakirathan
சமையல் வீடியோக்களை பார்வையிட்டு உணவு தயாரிக்கும் ரோபோ ஒன்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதற்காக நிகழ்ச்சி நிரல் செய்யப்பட்ட இந்த ரோபோ, மனிதர்கள் செய்யும் சமையல் வீடியோவைப் பார்வையிட்டு அது என்ன வகையான உணவு என்பதை கண்டுபிடித்து அதே உணவை தயார் செய்யும் ஆற்றல் கொண்டது.
அசத்தும் ரோபோ
ஆராய்ச்சி செய்து பார்ப்பதற்காக 8 உணவுக் குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றை அந்த ரோபோவிடம் கொடுத்ததாகவும், அதனை படித்து, அந்த 8 உணவுகளையும் இந்த ரோபோ சமைத்து அசத்தியுள்ளது.
பின்னர், தானே ஒரு புதிய வகை உணவை தயாரித்துக் கொடுத்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமைக்கும் செயல்முறையை 90 சதவீதமளவில் சரியாகக் கண்டறியும் திறன் பெற்றுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்