புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகப்படுத்திய முக்கிய நாடு : வேலையற்றோருக்கு மகிழ்ச்சி தகவல்
ஜேர்மனியில் (Germany) புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேர்மன் அரசாங்கம் அதன் Consular Services Portal-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்கள் விசா விண்ணப்பங்களை நிகழ்நிலையில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா முறை
இந்த புதிய டிஜிட்டல் விசா முறை ஜேர்மனியில் வேலை, கல்வி மற்றும் பயிற்சிக்கான விசாக்களை விரைவாக அனுமதிக்க உதவுகின்றது.
ஜேர்மனியில் தொழிலாளர்களுக்கான கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பணியாளர்கள் தேவை
இந்தநிலையில், ஆண்டு ஒன்றுக்கு குறைந்தது 400,000 திறமையான பணியாளர்கள் தேவைப்படுவதாக வெளியுறவு அமைச்சர் அனலேனா பேயர்போக் தெரிவித்துள்ளார்.
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவதற்காக அதிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த புதிய டிஜிட்டல் விசா முறைமை விரைவாகவும் எளிமையாகவும் உலகளாவிய திறமையான பணியாளர்களுக்கு ஜேர்மனியில் வேலை வாய்ப்புகளைத் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 13 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்