சரணாலயங்களுக்கான கட்டணங்களும் அதிகரித்தது
Sri Lanka
Dehiwala Zoological Garden
By Sumithiran
இலங்கையின் தேசிய விலங்கியல் திணைக்களத்தின் கீழ் உள்ள மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்வதற்கான கட்டணங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வர்த்தமானி அறிவிப்பின்படி, மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு உணவளித்தல், விலங்குகளுடன் புகைப்படம் எடுப்பது மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு உள் போக்குவரத்தை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கான கட்டணங்கள் இது ஆகும்.
தேசிய விலங்கியல் திணைக்களத்தின் கீழ் வரும் தெஹிவளையில் உள்ள விலங்கியல் பூங்கா, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக்காட்சிசாலை மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றுக்கான புதிய கட்டணங்கள் மே 02, 2023 முதல் நடைமுறைக்கு வருகின்றன.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி