கிழக்கின் புதிய ஆளுநர் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம்..!
Ranil Wickremesinghe
Senthil Thondaman
Eastern Province
By Dharu
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநராக நேற்றைய தினம் அதிபர் ரணில்விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றையதினம்(18) காலை காலை திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதில் கிழக்கு மாகாண சபையின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
புதிய ஆளுநர்கள்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் அதிபரினால் கடந்த 15ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதன்படி புதிய ஆளுநர்கள் நேற்றைய தினம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி