மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விரைவில் புதிய வீடுகள்! சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டு
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாண்டு 395 புதிய வீடுகளை அமைக்க திட்டமிடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தினால் தேசிய வீட்டு வசதி திட்டத்திற்கு அமைவாக ஒரு அழகான வாழ்க்கைக்கு சொந்த இருக்க இடம் என்னும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பிரதேச செயலக பிரிவிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட106 பயனாளிகளுக்கான முதல் கட்டமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் காசோலை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிரந்தர வீடு அற்றவர்களை தெரிவு செய்து அவர்களுக்கான நிரந்தர காணி வீட்டு வசதிகளை அமைத்து கொடுக்க உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக தமது அரசாங்கத்தினால் இன மத பேதம் அரசியல் வேறுபாடுகள் இன்றியும் பயனாளிகள் தெரிவு செய்யப்பட உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.






| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |