அரசின் புதிய சட்டம் ஆபத்தானது : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக அரசாங்கம் கொண்டுவரும் புதிய சட்டம் மிகவும் ஆபத்தானது என்று சமூக செயற்பாட்டாளர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக அரசாங்கம் பெப்ரவரி மாதம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருகிறது. இது தற்போது இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை விட மிக மோசமான சட்டமாகவே காணப்படுகிறது
இந்த சட்டம் மக்களுடைய பார்வைக்காக வெளியிடப்பட்டு நீதி அமைச்சால் மக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் மிக மோசமாக காணப்படுகிறது
குறித்த சட்டம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் இந்த சட்டம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியவர்கள் மூன்று பேர் ஜனாதிபதி ,நீதி அமைச்சர்,பாதுகாப்பு அமைச்சர்.இவர்களைத் தவிர வேறு யாரும் இது தொடர்பாக முடிவெடுக்க முடியாது

ஆகவே இந்த சட்டம் மிக மோசமான ஒரு சட்டமாகவே காணப்படுகிறது 400 பக்கங்களைக் கொண்ட இந்த சட்டம் மிக மோசமாக காணப்படுகிறது நாங்கள் ஒரு ஊடக சந்திப்பை கூட செய்ய முடியாத நிலைமை இந்த சட்டத்தில் காணப்படுகிறது.இந்த சட்டம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் இலங்கையில் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும்.
அரசாங்கத்தை விமர்சிக்க தடை
இந்த அரசாங்கம் போராட்டங்கள் ஊடாகத்தான் ஆட்சியை கைப்பற்றியது அந்த நிலை தன்னுடைய அரசாங்கத்திற்கும் ஏற்படும் எனத் தெரிந்துதான் இவ்வாறு ஒரு பயங்கரமான சட்டத்தை கொண்டு வருகிறது.

அரசாங்கத்தை விமர்சிக்க தடை ஏற்படுத்தி அரசாங்கத்தை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்வதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக நான் கருதுகிறேன்.
இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு தென் இலங்கையில் பொது அமைப்புகள் புத்திஜீவிகள் தயாராகி வருகின்றார்கள். வருகின்ற நாட்களில் பாரிய போராட்டத்தை நீதி அமைச்சின் முன்னால் மேற்கொள்ள இருக்கின்றார்கள். இந்த போராட்டம் வடகிழக்கிலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.
தமிழ் தலைவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை
இந்த சட்டம் தொடர்பாக விழிப்புணர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அனைத்து மக்களும் இந்த சட்டத்தில் இருக்கும் ஆபத்துக்கள் தொடர்பில் அறிய வேண்டும். நீங்கள் புதிய சட்டத்தை வாசித்து விட்டு தனிநபராகவோ, அல்லது குழுக்களாகவோ இந்த சட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று நீதி அமைச்சுக்கு தெரிவியுங்கள்.

மோசமான சட்டத்தை எதிர்த்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றவேளை மிக வேதனையான விடயம் என்னவென்று சொன்னால் எங்களுடைய தமிழ் கட்சிகள் தமிழ் தலைவர்கள் இந்த சட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை
இந்தச் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்கள். ஆகவே கொண்டுவரப்படவிருக்கும் மோசமான சட்டத்தில் இருக்கின்ற பாதிப்பை தமிழ் தலைவர்கள் மக்களுக்கு உணர்த்தி அதற்கு எதிராக போராட முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார் .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |