நவீன தொழில்நுட்பத்துடன் புதிய பாம்பன் பாலம்
India
World
By Thulsi
இந்தியாவின் (india) - ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய தொடருந்து பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை தெற்கு தொடருந்து பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்” ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாம்பன் பால பணிகள்
ஒக்டோபர் முதல் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே தொடருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் சுமார் 40 தொடருந்து மேம்பால திட்டப்பணிகளில் தொடருந்து துறை தனது பணிகளை முடித்துள்ளது.
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் மாநில அரசின் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்