லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இமாலய இலக்கு..!
ஐபிஎல் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 227 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர்.
இமாலய இலக்கு
தொடக்க துடுப்பாட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் ஷகா ஆகியோர் முதல் 6 ஓவர்களில் அதிக ஓட்டங்களை குவித்தனர்.
12வது ஓவர் வரை விக்கெட்டுகளை இழக்காமல் ஆடிய குஜராத் அணியின் வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஷகா ஆகியோர் 142 ஓட்டங்கள் குவித்தனர்.
சுப்மன் கில் அதிகபட்சமாக 51 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்களும் , 2 நான்கு ஓட்டங்களும் அடங்கலாக 94 ஓட்டங்களை குவித்தார்.
இந்த இமாலய இலக்கை நோக்கி துடுபெடுத்தாடும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியின் தலைவர் கே.எல் ராகுல், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக
காணப்படுகிறது.
எனினும் லக்னோ அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைந்துள்ளது.
