காணாமல் போனோர் விசாரணை! அமைச்சரவை மேற்கொண்டுள்ள முக்கிய முடிவு
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிப்பதற்கான சிறப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது.
காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி
இதன்படி, குறித்த அலுவலகம் இதுவரை 16,966 முறைப்பாடுகளை பெற்றுள்ளதுடன், அவற்றில் 10,517 விசாரணையில் உள்ளன.
இந்த நிலையில், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட 75 உறுப்பினர்களைக் கொண்ட 25 துணைக் குழுக்கள் இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கும் நியமிக்கப்படும் என்று கூறுகிறது.
இது தொடர்பான அமைச்சரவை முன்மொழிவானது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் சமர்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
