விவசாயிகளுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி தகவல்: அரசாங்கத்தின் புதிய முயற்சி
வன விலங்குகளால் விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான பரிந்துரைகளைப் பெறுவதற்கு ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்தாவின் (K. D. Lalkantha) அறிவுறுத்தலின் பேரில் இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கமத்தொழில், கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்கிரமசிங்கவினால் குறித்த சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வரிசையில் மக்கள்...! நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டு அபாயம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பரிந்துரைகள்
அத்தோடு, கமத்தொழில், கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் டி.எஸ். ரத்னசிங்க இந்தக் குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், 15 உறுப்பினர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நியமிக்கப்பட்டுள்ள குழுவால் முன்மொழியப்படும் அனைத்து பரிந்துரைகளும் மார்ச் மாத இறுதிக்குள் விவசாய அமைச்சரிடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து, விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 3 நாட்கள் முன்
